Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…வேலைச்சுமை அதிகரிக்கும்…முன்னேற்றம் உண்டு…!

துலாம் ராசி அன்பர்களே…!  தனவரவு தாராளமாக வந்து சேரும். விஐபிக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பழைய நட்பால் மனதிற்குள் மகிழ்ச்சி ஏற்படும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். உழைப்பதற்கு உண்டான வாய்ப்புகள் நிறையவே கிடைக்கும். தனியார் பணியில் உள்ளவர்களுக்கு இன்று அதிகமான வேலைப்பளுவை சந்திக்கக்கூடும். பங்குதாரர்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

புதிதாக தொழில் தொடங்க போட்ட திட்டம் தள்ளிப் போகும். பெண்கள் கணவரிடமும் மிகவும் சகஜமாக செல்லவேண்டும். தேவையில்லாத விஷயத்திற்காக வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் ஓரளவு கலகலப்பான சூழல் இருக்கும். சகோதரர்களின் ஒற்றுமை இருக்கும். இன்று காதலர்களுக்கு இனிமையான நாளாக இருக்கும். அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் இருக்கும்.

திருமணத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் மிகவும் சிறப்பாகவே இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இள மஞ்சள் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யும் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் இளம் மஞ்சள் நிறம்.

Categories

Tech |