Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு…புத்துணர்வுடன் செயல்படுவீர்கள்…சேமிப்பு உயரும்…!

மீன ராசி அன்பர்களே…! இன்று போட்டிகளை சமாளித்து வெற்றி காணும் நாளாக இருக்கும். திடீர் செலவுகள் இருந்தாலும் அதை ஈடுசெய்ய புதிய வரவுகள் வந்து சேரும். தந்தை வழியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். விட்டுப்போன உறவுகள்  மீண்டும் வந்து சேரும். புத்துணர்வுடன் இன்று காணப்படுவீர்கள். பண வரவு கூடுதலாக கிடைக்கும். சேமிப்பு உயரும்.

குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். நண்பர்களுக்கு இடையே இருந்துவந்த பிணக்குகள் நீங்கி நேசத்தோடு வாழ்வீர்கள். தடைப்பட்டுவந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். பிள்ளைகளிடமும் அன்பாக நடந்து கொள்வீர்கள். எடுத்த முயற்சி அனைத்திலுமே வெற்றி உண்டாகும்.

காதலர்களுக்கும் இன்றைய நாள் மிக சிறப்பான நாளாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் என்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 7

அதிஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம் மஞ்சள் நிறம்.

Categories

Tech |