Categories
சற்றுமுன் திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனாவுக்கு… ”25 நாள் ஆன குழந்தை பலி”… தி.மலையில் சோகம் …!!

தமிழகத்தில் இன்று மட்டும் 4,231 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,26,581 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,994 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், இதுவரை 78,161 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 65 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு 1,765 ஆக அதிகரித்துள்ளது.

திருவண்ணாமலையில் பிறந்து 25 நாளே ஆன பெண் குழந்தை கொரோனாவுக்கு பலியாகியுள்ளது. 3 முறை அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தை 07.07.2020 அன்று மாலை 02.30 மணிக்கு உயிரிழந்துள்ளது. கொடூர கொரோனாவுக்கு 25 நாளே ஆன குழந்தை உயிரிழந்துள்ளது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |