Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

என்ன கொடுமை இது ? இப்படி ஆகிடுச்சே… அரசை புலம்பவிட்ட ரிப்போர்ட் …!!

தமிழகத்தில் இன்று ஒரு மாவட்டம் விடாமல் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள மொத்த கொரோனா பரிசோதனை நிலையங்கள் 100ஆக உயர்ந்துள்ளது. இதில் 53 அரசு, 47 தனியார் ஆகும். தமிழகத்தில் இன்று மட்டும் 41,038 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 14,28,360 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 4,231 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,26,581 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 3,994 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், இதுவரை 78,161 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 65 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு 1,765 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 46,652பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றைய பாதிப்பில் 65 பேர்  வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள்.

தமிழகத்தில் குணமடைந்தோர் வீகிதம் 61.75 % ஆக உள்ளது. இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,216 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு மட்டும் மொத்தமாக 73,728 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை 20,271பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் ஈரோடு, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் புதிதாக தொற்று உறுதியாகாமல் இருந்த நிலையில் நேற்றும், இன்று அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இன்றைய மொத்த பாதிப்பில் 3,015 பிற மாவட்டங்களில் மட்டும் என்பது தமிழக அரசுக்கும், மக்களுக்கும் கவலை அளிக்கும் வகையில் உள்ளது.

Categories

Tech |