Categories
டெக்னாலஜி

குறைந்த பட்ஜெட்டில் அட்டகாசமான ஸ்மார்ட் போன் …. இந்தியாவில் அறிமுகப்படுத்திய லாவா….!!

லாவா நிறுவனம் தனது புதிய இஸட் சீரிஸ் ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் புதிய இசட் சீரிஸ் ஸ்மார்ட்போனினை பட்ஜெட் வகையில் லாவா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தகைய புதிய லாவா இசட்61 ப்ரோ ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம்,  8 எம்பி ப்ரைமரி கேமரா,  5.45 இன்ச் எச்டி,  18.9 டிஸ்ப்ளே, 5 எம்பி செல்பி கேமரா மற்றும்  1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர் ஆகியவை வழங்கியுள்ளனர்.

மேலும் புகைப்படங்களை அழகாக காட்டும் அம்சங்களும், ஃபேஸ் அன்லாக் வசதியும், 3100 மெகா பேட்டரி ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.மிட்நைட் ப்ளூ மற்றும் ஆம்பர் ரெட் ஆகிய இரண்டு விதமான நிறங்களில் லாவா இசட் 61 ப்ரோ ஸ்மார்ட் போன் கிடைக்கிறது. இத்தகைய சிறப்பம்சங்களை கொண்ட இந்த ஸ்மார்ட் போன் இந்தியாவில் ரூ.5774 என விலை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |