உத்திரபிரதேச மாநிலத்தில் 3 நாட்களுக்கு முழுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் நாளை இரவு 10 மணி முதல் ஜூலை 13 காலை 5 மணி வரை முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 3 நாட்கள் முழுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 3 நாட்கள் பொது முடக்கத்தின் போது அனைத்து அலுவலகங்கள், சந்தைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்படும்.
இருப்பினும், அத்தியாவசிய சேவைகள் அனுமதிக்கப்படும். ரயில்கள் தொடர்ந்து இயங்கும் என்று உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் இதுவரை 31,156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 20,331 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 845 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.