அமெரிக்காவில் குளியலறையில் இருந்த ஒரு பெட்டியை திறந்து பார்த்து மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பிரபல அமெரிக்க பல்கலைக்கழகத்தில் படித்துவரும் மாணவ மற்றும் மாணவியர் ஒரு வீட்டில் தங்கியிருந்திருக்கிறார்கள்.. ஒரு நாள் அந்த வீட்டிலிருக்கும் குளியலறையில் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒரு பெட்டி இருப்பதை கவனித்த ஆப்ரி (Aubrey) என்ற ஒரு மாணவி, அதுபற்றி தனது தோழி ஒருவரிடம் கேட்டுள்ளார்..
அந்த பெட்டி சந்தேகப்படும் படியாக அங்கு இருப்பதாக அந்த பெண்ணும் கூற, அதில் ஒரு ஓட்டை இருப்பதையும் இருவரும் கவனித்துள்ளனர்.. சரி, அப்படி அதில் என்னதான் இருக்கிறது என்று ஓபன் செய்து பார்த்த இளம்பெண்கள் இருவரும் அதிர்ச்சியடைந்து விட்டார்கள்..
காரணம், அந்த பெட்டிக்குள் ஒரு ஆப்பிள் மொபைல் போன் மறைத்துவைக்கப்பட்டிருந்திருக்கிறது. தாங்கள் குளிப்பதை நீண்ட நாட்களாக தங்கள் சக மாணவன் ஒருவன் தான் இப்படி தெரியாமல் வீடியோ எடுத்திருப்பதை உணர்ந்த அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனிடையே அந்த மாணவன் குரூப் சாட்டிங்கின் போது அந்த பெட்டியை எடுத்தது யார்? என்று கேட்டிருக்கிறான். அதற்கு அதில் அப்படி என்ன இருந்தது என்று இந்த பெண்கள் கேட்க, அவன் தன்னுடைய பேஸ்டும் பிரஷும் இருந்ததாக அசால்ட்டாக கூறியுள்ளான்..
பின் தாங்கள் உண்மையை கண்டுபிடித்துவிட்டோம் என்றுகூற, தான் பாட்டு கேட்பதற்காகவே அந்த பெட்டிக்குள் போனை வைத்திருந்ததாக முதலில் கூறிய அவன், பின் வேறு பல காரணங்களையும் கூறி பதட்டத்தில் உளறியுள்ளான்.. ஆதாரங்களுடன் சிக்கிய அவனுக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.