Categories
உலக செய்திகள்

1 நாள் கூட இல்லாத உச்சம்…. உலகிற்க்கே ஷாக்… கொரோனாவின் நேற்றைய வெறியாட்டம் …!!

உலகளவில் கொரோனாவின் தாக்கம் நேற்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது மக்களை அதிர வைத்துள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் சீனாவின் வுகாண் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப் படைக்கின்றது. 215 க்கும் அதிகமான நாடுகளில் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. உலக நாடுகள் கொரோனாவில் இருந்து எப்படி மீளலாம் ?என்று தவித்து வருகின்றனர். இதுவரை இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் உலக ஆய்வாளர்கள் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரம்  காட்டி வருகின்றனர்.

ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனாவால் செத்து மடிகின்றனர். உலகம் முழுவதும் 5.57 லட்சம் பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 1.35 லட்சம் பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா முதலில் வேகமாக பரவிய ஐரோப்பிய நாடுகளில் ஏறக்குறைய மூன்று மாதங்களுக்குப் பின்னர்கொரோனா  கட்டுக்குள் இருக்கிறது.

உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் அதன் தாக்கம் மிகத் தீவிரம் அடைந்துள்ளது. தினமும் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு என்ற அளவை எட்டியுள்ளது. நேற்றும், இன்றும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மட்டும் இதுவரை 32.19 லட்சம் பேர், பாதிக்கப்பட்டு 14.26 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

உலக அளவில் 1.23 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 5.57 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.  7 1.87 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 46.44 லட்சம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலக அளவில் இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 22 ஆயிரத்து 825 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பதிவாகாத புதிய உச்சம் நேற்று பதிவாகி உலக அரங்கை அதிர வைத்துள்ளது.

நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக….

அமெரிக்காவில் 61 ஆயிரம் பேருக்கும்,

பிரேசிலில் 42 ஆயிரம் பேருக்கும்,

இந்தியாவில் 25 ஆயிரம் பேருக்கும்,

சவுத் ஆப்பிரிக்காவில் 13 ஆயிரம் பேருக்கு,

மெக்சிகோவில் 6 ஆயிரம் பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |