முதலமைச்சர் பழனிசாமி உடன் மத்திய குழு அதிகாரிகள் ஆலோசனை நடைபெற இருக்கின்றது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றானது ஒரு லட்சத்து 20 ஆயிரம் வரை உயர்ந்திருக்கிறது. இதனால் மத்திய குழு நேற்று சென்னை வந்திருந்தது. மத்திய சுகாதாரத் துறை கூடுதல் செயலாளராக ஆர்த்தி அகுஜா, மத்திய இணைச் செயலாளர் உள்ளிட்டோரும் தமிழகம் வந்திருந்தனர். இந்த குழுவானது நேற்று முழுவதும் சென்னையில் இருக்கக்கூடிய கட்டுப்படுத்தப்பட்ட பகுதி, மருத்துவமனைகள், பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்ட பாதுகாப்பு மையங்களை பார்வையிட்டனர். இவை எவ்வாறு செயல்படுகிறது ? அவர்களுக்கு கொடுக்க கூடிய சிகிச்சை முறைகள் என்னென்ன ? என்பதை ஆய்வு செய்தனர்.
நாட்டிலேயே அதிகமான விகிதாச்சாரத்தில் நோய் தொற்று உடையவர்கள் உடனடியாக குணமடைந்து செல்லக்கூடிய ஒரு மாநிலமாக தமிழகம் இருக்கிறது. ஆகையால் இதையெல்லாம் கருத்தில் கொண்டு தமிழக அரசு மற்ற மாவட்டங்களுக்கு செய்திருக்கக் கூடிய விஷயங்கள் என்ன ? என்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தற்போது ஆலோசனை கூட்டம் நடைபெறுகின்றது. இந்த கூட்டத்தில் மத்திய குழு, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு என்ன மாதிரியான உதவிகளை செய்ய வேண்டும் ? சுகாதாரத் துறை சார்ந்த கோரிக்கையை என்னென்ன ? எதுபோன்ற வழிமுறைகளை கையாளலாம் ? என்பது தொடர்பாக ஆலோசிக்க வாய்ப்புள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு மத்திய அரசிடம் 11,000 கோடி ரூபாய் நிதி கேட்டிருந்தது தொடர்பாகவும் மத்திய குழுவிடம் தமிழக அரசு தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.