Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சாத்தான்குளம் வழக்கு – மதுரையில் சிபிஐ ஆலோசனை ….!

சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக மதுரையில் சிபிஐ அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றார்கள்.

சாத்தான்குளம் தந்தை – மகன் சித்திரவதை மரணம் தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. டெல்லி சிபிஐ அதிகாரிகள் இது தொடர்பான 2 வழக்குகளை பதிவு செய்திருக்கிறார்கள். மேஜிஸ்ட்ரேட் விசாரணை என்ற அடிப்படையில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் சட்டவிரோதமாக பிடித்து வைத்தல், கொலை தடயங்களை அழித்தல் போன்ற சந்தேகங்கள் இருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் பதியப்பட்டுள்ளது.

தற்போது சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் இருந்து மதுரைக்கு வந்து இருக்கிறார்கள். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சுக்லா தலைமையிலான டெல்லி சிபிஐ அதிகாரிகள் மதுரையில் முகாமிட்டு இருக்கிறார்கள்.டெல்லியில் இருந்து வந்திருக்க கூடிய சிபிஐ அதிகாரிகள் மதுரையில் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இந்த வழக்கை முதலில் எங்கிருந்து தொடங்கலாம் ? என்பது தொடர்பான சட்டரீதியான ஒரு ஆலோசனை நடத்தபடுவதாக தகவல் தெரிகின்றது. கொலை தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக  சிபிஐயில் சிறப்பு பிரிவு அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றது. அந்த சிறப்பு பிரிவு அதிகாரிகள் இந்த குழுவில் இருக்கிறார்கள். அவர்களும் டெல்லியில் இருந்து வந்திருக்கிறார்கள்.

Categories

Tech |