Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சாத்தான்குளம் வழக்கு – ஆவணங்கள் மதுரைக்கு மாற்றம் …!!

சாத்தான்குளம் விவகாரம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் தந்தை – மகன் உயிரிழப்பு சம்பவத்தை பொறுத்த வரை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி பல கட்ட உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது. இந்த வழக்கு விசாரணை நேற்று விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 7 அதிகாரிகள் கொண்ட சிபிஐ குழுவினர் நாளை ( இன்று ) மதுரைக்கு  வந்து, பின்னர் சாத்தான்குளம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிசிஐடி அதிகாரிகயிடம் பெற்று விசாரணையை தொடங்க இருப்பதாக நேற்றைய தினம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நிலையில் தற்போது சாத்தான்குளம் விவகாரம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து மதுரை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளன.முன்னதாக டெல்லியில் இருந்து வந்துள்ள சிபிஐ அதிகாரிகள் மதுரையில் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக சற்றுமுன் தகவல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |