Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு..!!

பூக்கடை வியாபாரி ஒருவர் கொரோனா தொற்றால் நேற்று உயிரிழந்ததன் மூலம் அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் முதல் பலி ஏற்பட்டுள்ளது.

அரியலூர் நகரின் பிரதான கடை வீதியாக மாங்காய் பிள்ளையார் கோயில் தெரு இருக்கிறது.. இந்த தெருவில் ஒரு பூக்கடையை வைத்து வியாபாரம் செய்து வந்தவர் தான் முருகன். இவருக்கு 3 நாட்களுக்கு முன் காய்ச்சல் இருந்ததால், திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு  சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்தநிலையில், நேற்று காலை அவர் சிகிச்சைப் பலனளிக்காமல் இறந்தார். அதனைத்தொடர்ந்து நேற்று மாலை வெளியான அவரது கொரோனா பரிசோதனை முடிவில் அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அவர் வியாபாரம் செய்த கடைப்பகுதியைச் சுற்றி அரை கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டது.

இந்த பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தபகுதியில் வணிகம் செய்தவர்கள் மற்றும் கடையின் உரிமையாளர்கள் பேருந்து நிலையம் அருகே இன்று நடைபெறும் கொரோனா பரிசோதனைக்கு கட்டாயம் வரவேண்டும் எனறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 492ஆக உள்ளது. இதில் 458 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்..

இந்தநிலையில், கொரோனாவுக்கு முதலாவதாக பூக்கடை வியாபாரி பலியாகி இருப்பது அரியலூர் மாவட்ட மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அரியலூர் மாவட்டத்தில் 33 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |