Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட பைக்… வாகன தணிக்கையில் வாக்குவாதம்… மனமுடைந்து உயிரை விட்ட திருநங்கை..!!

ஊரடங்கை மீறி வெளியே வந்த திருநங்கை சபினா என்பவரது பைக்கை போலீசார் பறிமுதல் செய்ததால் மனமுடைந்த அவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை கோடம்பாக்கம் காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் திருநங்கை சபினா.. 19 வயதுடைய இவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.. இந்த சூழலில் வழக்கம் போல் நேற்று இரவு (ஜூலை 9) தன்னுடைய நண்பர் செபிகாவுடன் பைக்கில் வள்ளுவர் கோட்டம் அருகே வந்துள்ளார்.

அப்போது அங்கு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதாகக் கூறி சபினாவின் பைக்கை பறிமுதல் செய்துள்ளனர். இதனால் போலீசாருடன் சபினா வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட தனது வண்டியை பெற சபினா நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றுள்ளார்.. அங்கு போலீசாரிடம் சபினா வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த போலீசார் அவர் கையில் அணிந்திருந்த வளையல் மற்றும் பொருள்களை உடைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் மனமுடைந்த சபினா அங்கிருந்து புறப்பட்டு சென்று கோடம்பாக்கத்திலுள்ள அவரது வீட்டுக்குச்சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்த அருகிலிருந்த நபர்கள் சபினாவை உடனே மீட்டு, கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |