முக கவசம் அணிந்து வந்த நபர் துப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஸ்விட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்திலுள்ள கோனிஸ் பகுதியில் அமைந்துள்ள வங்கியில் திங்கட்கிழமை மதியம் மர்ம நபர் ஒருவர் கொள்ளை அடித்துள்ளார். காவல்துறையினர் வெளியிட்ட தகவலின் கீழ் அந்த மர்ம நபர் மாஸ்க் அணிந்து துப்பாக்கியை காட்டி வங்கி ஊழியர்களை அச்சுறுத்தி பணத்தை கொள்ளையடித்துள்ளார்.
பின்பு அங்கிருந்து கோனிஸ் ரயில் நிலையத்தை நோக்கி சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்ட காவல்துறையினர், இவரை கண்டறிய பொதுமக்கள் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.