Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கர்நாடக முதல்வருக்கு கொரோனாவா ? தனிமைப்படுத்திக் கொண்ட எடியூரப்பா …!!

கர்நாடக மாநில முதல்வர் அலுவலக ஊழியர்கள் சிலருக்கு கொரோனா உறுதியான நிலையில் முதலமைச்சர் எடியூரப்பா தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.

கர்நாடக மாநில எடியூரப்பா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கின்றார் என்று முதல்வர் அலுவலகம் தெரிவித்து இருக்கின்றது. தொடர்ச்சியாக தான் பணிகளில் அரசு பணிகளில் ஈடுபடுவேன் என்பதையும் அவர் தெரிவித்திருக்கின்றார். ஜார்க்கண்ட் முதல்வர் ஆகட்டும், மத்திய பிரதேச முதல்வர் ஆகட்டும், பெரும்பாலான முதல்வர்கள் கொரோனா அறிகுறி தெரிந்தால் அல்லது தங்களது அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு கொரோனா அல்லது அவர்களுக்கு அறிகுறி இருந்தால் உடனடியாக தங்களைத் தனிமைப் படுத்திக் கொள்கிறார்கள்.

ஏற்கனவே மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்களும் இதே மாதிரியே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தான் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இது ஒரு முன்னுதாரணமாகும் இருக்கும். அதனால தான் மாநில முதல்வர்கள் தாங்களாகவே முன்வந்து தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரை முதலமைச்சர் அலுவலகத்தில் பணிபுரிய கூடிய 10க்கும் மேற்பட்டோருக்கு  கொரோனா அறிகுறி இருப்பதாகவும் சொல்லப்பட்டு இருக்கிறது. சிலருக்கு கொரோனா உறுதியாகியிருக்கிறது. அதனையடுத்து தான் தற்போது அம்மாநில முதல்வர் இத்தகைய முடிவை எடுத்திருக்கிறார்.

Categories

Tech |