Categories
சற்றுமுன் திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

17ஆம் தேதி வரை கடைகளை மூட உத்தரவு – திருச்சி மாநகராட்சி அதிரடி …!!

திருச்சி மாநகராட்சி மாநகராட்சி பகுதியில் 17ஆம் தேதி வரை கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலை, பெரியகடைவீதி, சின்னக்கடை வீதி, கமலா தெரு உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மட்டுமல்லாமல், சுகாதாரத்துறை மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த பகுதிகளில் தினமும் 50க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு என்பது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் சற்று நேரத்துக்கு முன்னதாக திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் உத்தரவுக்கிணங்க மாநகராட்சி ஊழியர்கள் மூலமாக ஒலிபெருக்கி இன்று இரவிலிருந்து நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலை, பெரியகடைவீதி, சின்னக்கடை வீதி, கமலா தெரு பகுதியில் எந்த கடையும் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மல்லிகை மற்றும் மருந்துக்கடை, ஏடிஎம், வங்கிகள், அத்தியாவசிய பொருட்களை தவிர மற்றவை அனைத்தும் மூடப்பட வேண்டும். வருகின்ற 17 ம்தேதி அதிகாலை வரை செயல்படக்கூடாது என்ற உத்தரவை பிறப்பித்துள்ளார். அதற்காக ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு தற்போது கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் மக்கள் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கின்றது. இது அடர்த்தி அதிகமாக உள்ள பகுதியாகும். வீடுகள் மிகவும் நெருக்கமாக உள்ள பகுதி எனவே தற்போது மாநகராட்சி நிர்வாகம் இந்த நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறார்கள்.

Categories

Tech |