ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெம்மிங்கின் பிறந்த நாளை CSK அணியினர் வெகு சிறப்பாக கொண்டாடினர்.
நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடேயேயான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி ஹாட்ரிக் வெற்றியை ருசித்தது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெம்மிங்கின் 46வது பிறந்த நாளை சென்னை அணியினர் வெகு சிறப்பாக கேக் வெட்டி கொண்டாடினர். ரெய்னா மெழுகுவர்த்தி கொளுத்தி கேக்கை வெட்டி முதலில் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெம்மிங்குக்கு ஊட்டினார். அதன் பிறகு தோனி, பிராவோ என அனைத்து வீரர்களும் அவருக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தனர். சுற்றி நின்று கைதட்டி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மோஹித் சர்மா, பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெம்மிங்கின் மீது மகிழ்ச்சியுடன் கேக்கை முகத்தில் தடவ சுற்றி உள்ள வீரர்கள் சிரித்து மகிழ்கின்றனர்.
பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெம்மிங் சின்ன தல ரெய்னாவுக்கு கேக் ஊட்ட அருகில் தோனி, பிராவோ, போன்ற சக வீரர்கள் சுற்றி நின்று கை தட்டி பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
ரெய்னா, பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெம்மிங்குக்கு கேக் ஊட்ட தயாராக நிற்கிறார்.அதன் பிறகு ஒவ்வொருவராக கேக் ஊட்டினர். மேலும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அனைவரும் உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடினர்.