Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

உடனே எங்க இருக்காங்கனு பாருங்க…. எல்லாருக்கும் இலவசமாக கொடுங்க… உத்தரவு போட்ட நீதிமன்றம் …!!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கண்டறிந்து இலவச ரேஷன் பொருட்களை வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சூரியப் பிரகாசம் என்பவர் தொடர்ந்த வழக்கில் மகாராஷ்டிராவில் இருக்கின்ற தமிழர்களை மீட்க வேண்டும் என்று சொல்லப்பட்டு இருந்தது. அந்த வழக்கில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடை பயணமாகவே தமிழக எல்லையைக் கடந்துசெல்கிறார்கள். அவர்கள் தமிழகத்தில் இருப்பதால் பல முன்னேற்றம் ஏற்படுகின்றது. அவர்கள் ஏன் முறையாக பேருந்து வசதி செய்து கொடுக்கவில்லை என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில், தொழிலாளர்கள் வெளியே செல்வதற்கும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருவதற்கும் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. உணவுப் பொருட்கள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனை பதிவு செய்துள்ள நீதிமன்றம், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை உடனடியாக கண்டறிந்து அவர்களுக்கு ரேஷன் உள்ளிட்ட பொருட்களை உடனே வழங்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தார்.

மேலும் கோவையில் புலம்பெயர்ந்த தொழிலாளிக்கு பிரசவத்திற்கு அரசு மருத்துவமனையில் அனுமதி வழங்காதது துரதிஷ்ட வசமான சம்பவம். ஆட்டோவில் பிரசவித்த புலம்பெயர்ந்த தொழிலாளிக்கு தேவையான மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் உத்தரவிட்டு, இதுகுறித்த அறிக்கையை ஜூலை மாதம் 13ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |