சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
சென்னை வடக்கு மண்டல கொரோனா தடுப்பு அதிகாரியாக கபில் குமார் சி சரத்கர். சென்னை கிழக்கு மண்டலத்திற்கு பவானீஸ்வரி ஐபிஎஸ், சென்னை தெற்கு மண்டலத்திற்கு பாஸ்கரன் ஐபிஎஸ் ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளார்கள். சென்னை மேற்கு மண்டலதிற்கு சிறப்பு அதிகாரியாக கணேசமூர்த்தியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.
அதே போல செங்கல்பட்டு மாவட்டத்திற்கு கொரோனா சிறப்பு அதிகாரியாக உதயச்சந்திரன் ஐஏஎஸ், அன்பு ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். திருவள்ளூர் மாவட்டத்திற்கு கே பாஸ்கரன் ஐஏஎஸ், வினிதா ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்திற்கு சுப்பிரமணியன், சரோஜ் குமார் தாகூர் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சற்று முன்னர் தான் தமிழகம் முழுவதும் இருக்கின்ற 51 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு அதிரடி நடவடிக்கையாக சென்னையில் உள்ள கொரோனா சிறப்பு அதிகாரிகள் மாற்ற்றப்பட்டனர். சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணியில் இருந்த அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.