மேஷ ராசி அன்பர்களே …! இன்றுஏற்றுமதி நுட்பத்துடன் செயல்படுவீர்கள். தொழில் வளர அதிகார பலம் பெறுவீர்கள். உபரி பண வருமானம் திருப்திகரமாக வந்து சேரும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிறைந்து காணப்படும். அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும்.
பிள்ளைகளிடம் அன்பு, பாசம் காட்டுவது ரொம்ப நல்லது. கலைத்துறையினர் சீரான நிலையில் இருப்பார்கள். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால் கடந்த காலத்தைவிட இன்று நன்மை அதிகமாகவே இருக்கும். செய்தியிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். மற்றவர்கள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள்.
காதலர்களுக்கும் இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது அடர் நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. அடர் நீலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக கொடுப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5
அதிஷ்ட நிறம்: அடர் நீலம் மற்றும் சிவப்பு நிறம்.