Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு…திட்டம் செயல்வடிவம் பெறும்…வருமானம் அதிகரிக்கும்…!

சிம்ம ராசி அன்பர்களே…!   இன்று உங்கள் மனதில் உதித்த திட்டம் செயல்வடிவம் பெறும். தொழில் வியாபாரம் செழிக்க தேவையான அளவில் பணிபுரிவீர்கள், கூடுதல் வருமானமும் கிடைக்கும். உறவினர்களுடன் சந்திப்பு சந்தோஷத்தை  ஏற்படுத்தும். உத்தியோகம் பார்ப்பவர்கள் தொடர்ந்து சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் உழைப்புக்கு தகுந்த செல்வம் கிடைக்கும். உடன் பணிபுரிவோர் ஆலோசனைகளும் உண்டாகும்.

உங்கள் பொறுப்புகளை தயவுசெய்து தட்டிக் கழிக்க வேண்டாம். எந்த வேலையையும் நேரம் தவறாமல் செய்யவும் தள்ளிப் போடுதல் கூடாது. அதேபோல இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கொஞ்சம் பொறுமை என்பது கண்டிப்பாக வேண்டும். வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்லவேண்டும். மற்றவரிடம் உரையாடும் பொழுது கோபமில்லாமல் பேசவேண்டும். மிக முக்கியமாக வாக்குறுதிகள் எதுவும் கொடுக்கக் கூடாது. அதே போல பணம் நான் பெற்றுத் தருகிறேன் என்று எந்தவித வாக்குறுதியும் தயவுசெய்து கொடுக்காதீர்கள்.

உங்களுடைய வேலையை நீங்கள் செய்வதுதான் இன்று ரொம்ப நல்லது. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப ரொம்ப நல்லது. இளம்சிவப்பு உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5

அதிஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |