Categories
உலக செய்திகள்

எல்லாரும் திட்டுனாங்க…. மக்களுக்காக தாங்கிட்டேன்…. இப்போ நீங்களும் திட்டுறீங்க…. புலம்பும் ட்ரம்ப்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமெரிக்க அரசு தோல்வி அடைய நிலைக்கு சென்றுள்ளது.

சீனாவின் வுகாண் நகரில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்  இன்று 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. கடந்த ஏழு மாதமாக உலக நாடுகள் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. தற்காலிக உத்தரவுகளை பிறப்பித்து பல்வேறு நாடுகள் கொரோனாவின் தாக்கத்தை குறைத்து வருகிறது. குறிப்பாக சீனாவுக்கு அடுத்து அதிகம் பாதிக்கப்பட்டது ஐரோப்பிய நாடுகள் தான். இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன், ஜெர்மனி,பிரான்ஸ்  போன்ற நாடுகளில் அதிக தொற்று கொண்ட நாடுகளாக இருந்தன. இந்த நாடுகளுக்கு பிறகு தான் அமெரிக்காவில் தொற்று வேகமாக பரவியது.

25 லட்சம் பேர் பாதிப்பு:

இத்தாலி, பிரான்சு, ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகளில்கொரோனா தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. குறிப்பாக ஒரு மாதம் வேகமாக பரவிய கொரோனா அடுத்த மாதம் உச்சம் பெற்றது. பின்னர் குறைய தொடங்கியது. தற்போது குறைந்த அளவிலேயே பாதிப்பு விகிதம் சென்று கொண்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. அங்குள்ள ரஷ்யாவிலும் வேகம் எடுத்து வந்தது தற்போது கட்டுக்குள் உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் மட்டும் 25 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு 1.95 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

மிரட்டிய அமெரிக்கா:

ஐரோப்பிய நாடுகளை கொரோனா பதம் பார்த்துக் கொண்டிருக்கும்போதுதான் அமெரிக்காவில் பரவ தொடங்கியது. அமெரிக்காவில் வேகமாக பரவிய கொரோனாவை கட்டுப்படுத்த ட்ரம்ப் நிர்வாகம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த காலகட்டத்தில் கொரோனாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சீனா மீண்டு வந்து, பிற நாடுகளுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்க ஆரம்பித்தது. இதை அறிந்த ட்ரம்ப், சீனாவிடம் மருத்துவ உபகரணம், மருந்துகளை வாங்கினார். சீனா பிற நாடுகளுக்கு மருத்துவ பொருட்களை வழங்குவதையும் கைப்பற்றியது அமெரிக்கா. அமெரிக்காவின் இந்த அடாவடித்தனத்தை பல்வேறு உலக நாடுகள் கண்டித்தன. இந்தியாவையும் கூட மிரட்டி மருந்து வாங்கினார் என்ற விமர்சனங்கள் ட்ரம்ப் மீது எழுந்தது.

உலகிற்கு பரிந்துரை:

பல்வேறு நாடுகளின் குற்றச்சாட்டுக்கள் ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க ட்ரம்ப்  நிர்வாகம் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அமெரிக்க மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக பல்வேறு விஷயங்களை செய்தது. வல்லரசு நாடான அமெரிக்கா தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்தாலும்  ஒருபுறம் நாங்கள் மருந்தை கண்டுபிடித்து விட்டோம்…. இந்த மருந்து கொரோனா நோயை கட்டுப்படுத்தும்…  அந்த மருந்து கொரோனாவை கட்டுப்படுத்தும்…. என்றெல்லாம் அமெரிக்க அதிபர் உலக நாடுகளுக்கு பல பரிந்துரை வழங்கினார்.

வெறுப்புணர்வு:

பல்வேறு மருந்துகளை பரிந்துரை செய்த அதே வேளையில் சீனாவையும் கடுமையாக விமர்சனம் செய்தார் ட்ரம்ப். கொரோனா தடுப்பு நடவடிகைகளை உலகிற்கே வழிகாட்டி கொண்டிருக்கும் உலக சுகாதார மையத்தை கூட கடுமையாக சாடினார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.அமெரிக்க மக்களின் நலனுக்காக தான் ட்ரம்ப் அரசாங்கமும், அதிபர் ட்ரம்ப்பும் இந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்று அமெரிக்க மக்கள் ஏற்றுக் கொண்டாலும், தற்போது அமெரிக்காவின் நிர்வாகம் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது கொரோனா பரவல்.

பிற நாடுகள்:

அனைத்து நாடுகளும் மூன்று மாதங்களில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்த நிலையிலும், அனைத்தும் அறிந்த, உலக வல்லரசான, உலக பணக்கார நாடான, அனைத்து வசதிகளும் மக்களுக்கு செய்து கொடுக்கக் கூடிய, இடத்தில் உள்ள அமெரிக்க அரசாங்கம் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வராமல் திணறுகிறது. இதற்கு என்ன காரணம் என்று  அமெரிக்க மக்கள் அரசை பார்த்து கேள்வி கேட்கின்றனர். எந்தெந்த நாடுகள் இடமெல்லாம் மருந்து பொருட்களை அடாவடித்தனம் செய்து ட்ரம்ப் அரசு அமெரிக்காவுக்கு வாங்கிச் சென்றதோ அந்த நாடுகள் அனைத்தும் இன்று கொரோனாவை கட்டுக்குள் வைத்து உள்ளது. ஆனால் அமெரிக்கா அரசு கொரோனாவின் கோர பிடியில் சிக்கியுள்ளது.

தினமும் 60,000:

தின்தோறும் 20 ஆயிரமாக இருந்த பாதிப்பு 30,000 ஆக மாறியது. 30 ஆயிரத்தை கடந்த பாதிப்பு 40 ஆயிரம், 50 ஆயிரம் என கடந்த இரண்டு நாட்களாக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை 32.19 லட்சம் பேருக்கு கொரோனா பரவியுள்ளது. 1.35 லட்சம் பேர் உயிரிழந்துள்ளார். இன்னும் சில மாதங்களில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வர இருக்கிறது. இந்த தேர்தலில் அமெரிக்க அதிபர் நிச்சயம் தோல்வி அடைவார் என்று அங்குள்ள கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதற்க்கு காரணம் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அரசு தோல்வி அடைந்தது என்று அங்குள்ள ஊடகங்கள் விமர்சிக்கின்றன.

Categories

Tech |