Categories
தேசிய செய்திகள்

நடுங்க வைத்த வில்லன்… தெறிக்கவிட்ட தமிழன்… கொண்டாடும் காவல்துறை …!!

நாட்டையே உலுக்கிய உ.பி போலீசார் 8 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ரவுடி விகாஸ் துபே கொல்லப்பட்டுள்ளார் 

நாட்டையே உலுக்கிய 8 காவலர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான விகாஸ் துபே மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்வதில் முக்கிய பங்காற்றியவர் கான்பூர் மாவட்ட எஸ்.எஸ்.பி தினேஷ் குமார் பிரபு. தினேஷ்குமார் பிரபு தமிழகத்தின் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். அவரது தந்தையின் பெயர் பிரபு, அவர் இளங்கலை மேலாண்மை பட்டம் முடித்து, அதன் பின்னர் அகில இந்திய குடிமை பணி தேர்வு எழுதி, 2009 ஆம் ஆண்டு முதல் அவர் பணியில் இருந்து வருகிறார்.

இவர் தான் உத்தரவு:

இதற்கு முன்னர் அவர் உத்தரபிரதேச மாநிலத்தில் மாவட்ட எஸ்பி ஆக பணிபுரிந்து வந்தார். அப்போது பல்வேறு சிறப்பான நடவடிக்கையின்  மூலம் அனைத்து தரப்பினரின் பாராட்டுகளை பெற்றவர் தினேஷ்குமார் அவர் கடந்த ஜூன் 22ஆம் தேதிதான் கான்பூர் மாவட்டம் எஸ்எஸ்.பி ஆக நியமிக்கப்பட்டார். ஜூன் 22ஆம் தேதி நியமிக்கப்பட்ட உடனே ஜூலை 2ஆம் தேதி இவர்தான் பிரபல ரவுடி விகாஸ் துபேவை கைது செய்யும்படி உத்தரவை பிறப்பித்தார்.

அதிரடி நடவடிக்கை:

அந்த அடிப்படையில் தான் விகாஸ் துபேவின் கைது நடவடிக்கைக்கு சென்ற பின்னர் காவலர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இந்த சம்பவம் நடந்த உடனேயே அனைத்து தரப்பிலும் காவல்துறையினரை முடக்கி விட்டு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார் தினேஷ்குமார் பிரபு. குறிப்பாக இந்த வழக்கில் விகாஸ் துபேவிற்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட  சயூபெய்புர்  காவல்நிலையத்தின் காவல் ஆய்வாளரை உடனடியாக பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்தார்.

தேடுதல் வேட்டை:

மேலும் இரண்டு காவளர்களை அவர் கைது செய்து இருக்கிறார். இது தவிர  சயூபெய்புர்  காவல் நிலையத்தில் பணிபுரிந்த 60க்கும் மேற்பட்ட காவலர்களை அதிரடியாக ஒரே நாளில் இடமாற்றம் செய்து உத்தரவை பிறப்பித்தார்.அதன் பிறகு உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அரியானா, டெல்லி உள்ளிட்ட அண்டை மாநில காவல் துறையினருடரோடு இணைந்து பணியாற்றி தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார்.

குவியும் பாராட்டு:

அந்த தேடுதல் வேட்டையில் தான் நேற்று விகாஸ் துபே மத்தியபிரதேச காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். விகாஸ் துபே கைது செய்யப்பட்ட விவகாரத்தில் தினேஷ்குமார் பிரபுவின் பங்கு மிக முக்கியமானதாக இருப்பதாக கருதப்படுகிறது. அவருக்கு பல்வேறு தரப்பு காவல்துறையினர் வெகுவாக தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். தற்போது விகாஸ் துபே என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |