பஞ்சாப் அணி 10 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழந்து 86 ரன்களுடன் விளையாடி வருகிறது
12வது ஐ.பி.எல் தொடரின் 13-ஆவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டி பஞ்சாப்பில் உள்ள மொஹாலி ஸ்டேடியத்தில் தற்போது தொடங்கி உள்ளது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களான கே.எல் ராகுலும், கர்ரனும் களமிறங்கினர். தொடக்கத்தில் பவுண்டரியுடன் சிறப்பான துவக்கம் கொடுக்க அதன் பின் மோரிஸ் பந்து வீச்சில் கே.எல் ராகுல் 15 ரன் எடுத்த நிலையில் எல்.பி. டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்..
அதன் பின் சர்பராஸ் கான் களமிறங்கினார். அதிரடியாக விளையாடி கொண்டிருந்த கர்ரனும் 20 (9) ரன்களில் லமிச்சானே பந்து வீச்சில் எல்.பி. டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து மயங் அகர்வாலும், சர்பராஸ் கான் ஜோடி சேர்ந்தனர். அதன் பின் அகர்வால் (6 ரன்கள்) நிலைக்கவில்லை ஷிகர் தவானால் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின் மில்லரும், சர்பராஸ் கானும் விளையாடி வருகின்றனர்.