துலாம் ராசி அன்பர்களே…! இன்று உங்களின் அனுபவ அறிவு பலம்பெரும். தொழில் வியாபாரம் தொடர்பு பலம் பெறும். தாராள அளவில் பண வரவு கிடைக்கும். இன்று நான் நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். சகோதர வழியில் தேவையான உதவிகளும் கிடைக்கப் பெருவிர்கள். சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது நல்லது. திடீர் கோபம் கொஞ்சம் உண்டாகலாம். யாரையும் எடுத்தெறிந்து பேசாமல் இருப்பது நல்லது.
குறிப்பாக தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நன்மையை கொடுக்கும். மற்றவரிடம் எந்தவித வாக்குவாதத்திலும் கண்டிப்பாக நீங்கள் இன்று ஈடுபடவேண்டாம். மாலை நேரங்களில் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுங்கள் உள்ளமும் மகிழ்ச்சியாக காணப்படும். உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
காதலர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 1
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் அடர் நீல நிறம்.