மகர ராசி அன்பர்களே …! இஷ்டதெய்வ அருள் துணை நிற்கும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி செய்வீர்கள். உற்பத்தி விற்பனை திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வு உண்டாகும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி இருக்கும். உடல் உழைப்பு மட்டும் அதிகமாக தான் இருக்கும். புதிய தெம்பும், உற்சாகமும் ஏற்படும். புதிய பதவிகள் உங்களைத் தேடி வரக்கூடும்.
பண கஷ்டம் நீங்க வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எனினும் யோகமான பலன்களையே இன்று உங்களுக்கு கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். எதிர்ப்புகள் விலகி செல்லும். தொழில் வியாபாரப் போட்டிகள் நீங்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் கையில் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலாவதில் மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.
காதலர்களுக்கும் இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாளாகவே இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீளம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெள்ளை நிறம்.