மீன ராசி அன்பர்களே…! பிறரது சூழலை உணர்ந்து பேசுவது ரொம்ப அவசியம். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி கால அவகாசத்தில் நிறை வேறும். செலவு அதிகரிக்கும். தியானம் தெய்வ வழிபாடு மன அமைதி பெற உதவும். இன்று எதிர் பாலினரிடம் பழகும் பொழுது கண்டிப்பாக எச்சரிக்கை வேண்டும். கடன் கொடுப்பது பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணவரவு அதிகரிக்கும்.
ஆனால் அதே நேரத்தில் ஓயாத வேலையும் அலைச்சலும் இருக்கும். சிலருக்கு இடமாற்றம் உத்தியோக மாற்றம் போன்றவை ஏற்படலாம். செலவு கட்டுக்கடங்காமல் செல்லும் பார்த்துக்கொள்ளுங்கள். பிள்ளைகளிடம் கோபப்படாமல் அன்பாக நடந்து கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கு இடையே சிறியதாக வாக்குவாதங்கள் வந்து செல்லும். காதலர்கள் இன்று பேச்சில் கண்டிப்பாக நிதானத்தை கடைபிடித்து தான் ஆகவேண்டும்.
அதே போல் தாயின் உடல் நிலையில் கவனம் கொள்ளுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.