குடிநீர் நோய்த் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக செய்ததாக தமிழக முதல்வருக்கு அமெரிக்க நிறுவனம் பாராட்டை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் சிக்காகோ நகரத்தில் இயங்கி வரும் The Rotary Of Rotary International சார்பில் உலகளவில் குடிநீர், சுகாதாரம், நோய் தடுப்பு, தாய் சேய் நலம், சுற்றுசூழல், உலக சமாதானத்தில் சிறப்பான சேவை புரிவோர் பாராட்டப்படுவார். அந்தவகையில் தமிழக முதல்வரும் தற்போது பாராட்டப்படுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பால் ஹேரிஸ் பெல்லோ (PAUL HARRIS FELLOW) என்று அழைத்து கௌரவப்படுத்தி உள்ளது.
சிகாகோ நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் இந்த ரோட்டரி பவுண்டேஷன் ஆஃ ரொடரி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு குடிநீர், நோய் தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல், உலக சமாதானம் போன்ற பல்வேறு துறைகளில் சிறப்பாக செயலாற்றியதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கௌரவித்து உள்ளதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் தெரியப்படுத்தியுள்ளார்.