உலக அளவில் ஏழாவது பணக்காரராக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி தலைவர் முகேஷ் அம்பானி முன்னேறியுள்ளார்.
உலக அளவில் இருக்கும் பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டது. அதன்படி முதலிடத்தில் அமேசான் நிறுவன சிஇஓ ஜெஃப் பெஜோஸ் 186. 8 டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் இருக்கின்றார். இரண்டாவது இடத்தில் பில் கேட்ஸ் 110.5 பில்லியன் டாலர் சொத்துகளுடன் உள்ளார்.
இந்தப் பட்டியலில் ஏழாவது இடத்தில் இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானிக்கு 70.1 பில்லியன் டாலர் சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் 68.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஏழாவது இடத்தில் இருந்த ஆரக்கிள் ஆஃப் ஒமாஹாவின் வார்ரன் பஃப்பெட்டை பின்னுக்குத் தள்ளி முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.