பொலிவியா நாட்டின் அதிபர் உட்பட 7 அமைச்சர்களுக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பொலிவியா அரசாங்கத்தின் சுகாதார மந்திரி உட்பட 7 அமைச்சர்களுக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் சிகிச்சை எடுத்து வருவதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து தென் அமெரிக்காவின் இரண்டாவது தலைவரான அனேஸ் கூறுகையில், “தனது குழுவில் இருக்கும் பலருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது” என தெரிவித்துள்ளார். அனேஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட காணொளி ஒன்றில் “நான் வலுவாகவே உணர்கின்றேன். தனிமைப்படுத்தலில் எனது பணிகளை ஆற்ற போகிறேன்.
இக்கட்டான சுகாதார நெருக்கடியில் எங்களுக்கு உதவுவதற்காக உழைத்து வரும் அனைத்து பொலிவியருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார். அந்நாட்டின் 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டு 1500 இறப்புகள் ஏற்பட்டுள்ளது. பிரேசில் ஜனாதிபதியான போல்சனரோவுக்கு அடுத்ததாக தொற்று உறுதியானது அனேஸ்க்கு. அதோடு தொற்று நோயின் தாக்கம் அதிகமானதால் மே மாதம் நடத்தப்பட இருந்த பொதுத் தேர்தல்கள் செப்டம்பர் மாதம் 6ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.