Categories
அரசியல் மாநில செய்திகள்

நேற்று… இன்று…. நாளை…. எல்லாம் ஒரே முடிவு தான்…. சசிகலா வேண்டாம்… அதிரடி காட்டிய அமைச்சர் …!!

சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் கட்சித் தலைமைப் பொறுப்பை வழங்கப்படுமா என்பது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் விடுதலை ஆவார் என்ற தகவல் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. சசிகலா விடுதலை ஆகும் பட்சத்தில் தமிழக அரசியலில் பெருத்த மாற்றம் ஏற்படும் என்றும்,  அதிமுக சசிகலா கட்டுப்பாட்டில் இயங்கும் என்றெல்லாம் பல்வேறு விதமான கருத்துக்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில்தான் இது குறித்த கேள்விகளுக்கு அமைச்சர் ஓ.எஸ் மணியன், அமைச்சர் ஜெயக்குமார் மாறுபட்ட பதில் அளித்துள்ளனர்.

நாகை மாவட்டம் செருதூரில் கைத்தறித் துறை அமைச்சர் ஓ எஸ் மணியனிடம் இதுகுறித்த கேள்வி கேட்கும் போது நான் ஒரு சாதாரண மாவட்ட செயலாளர் தான்… முடிவெடுப்பது தலைமை தான்… தலைமையில்தான் நீங்கள் கேள்வி கேட்க வேண்டும். தலைமையை கேள்வி கேட்பது தான் சரியாக இருக்கும் என்று தெரிவித்தார்.அமைச்சர் ஓ எஸ் மணியன் கருத்து தொடர்பாக கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், அது அமைச்சர் ஓ எஸ் மணியனின் கருத்து.

அவருடைய தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். அதை நான் போக விரும்பவில்லை.ஆனால் கட்சியினுடைய கருத்து வந்து வேணும். கட்சியின் கருத்து என்பது நேற்று எடுத்த முடிவுதான், இன்றும் அதே முடிவுதான், நாளையும் அதே முடிவுதான், நேற்று இன்று நாளை எல்லாம் ஒரே முடிவுதான். ஒரே முடிவு என்றால் என்ன முடிவு ? அன்னைக்கு ஒட்டுமொத்த முடிவை அனைவரின் சார்பிலும் நான் சொன்னேன். அந்த குடும்பம், சசிகலா அவங்க இல்லாம கட்சியையும், ஆட்சியையும் நடத்துவதுதான் அதுதான் ஒரே லட்சியம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Categories

Tech |