உலகளவில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பரில் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இன்று 210க்கும் மேற்பட்ட நாடுகளில், அதன் கொடூர தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் சமூக விலகல் மட்டுமே தீர்வு என உலக நாடுகள் தங்களது மக்களை ஊரடங்கு பிறப்பித்து முடக்கி வைத்துள்ளனர். தினம் தோறும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் பலியாகி வரும் அவலம் அரங்கேறுவது உலக மக்களை உலுக்கியுள்ளது.
உலகளவில் இதுவரை 1 கோடியே 26 லட்சத்து 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 5.62 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 73 லட்சத்து 32 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 47 லட்சத்து 28 ஆயிரம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்ச பாதிப்பாக வல்லரசு நாடு அமெரிக்கா சந்தித்துள்ளது.உலக அளவில் இதுவரை இல்லாத அளவாக புதிய உச்சமாக நேற்று தொற்று பதிவாகியுள்ளது.
நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 36 ஆயிரத்து 918 பேருக்கு தூக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது இது இதுவரை ஒரே நாளில் பதிவாகாத புதிய உச்சமாகும். அதிகபட்சமாக…..
அமெரிக்காவில் 71,787 பேருக்கும்,
பிரேசில் நாட்டில் 45 ஆயிரத்து 235 பேருக்கும்,
இந்தியாவில் 27 ஆயிரத்து 761 பேருக்கும்,
சவுத் ஆப்பிரிக்காவில் 12,348 பேருக்கும்,
மெக்சிகோவில் 7,280 பேருக்கும்,
கொலம்பியாவில் 6,803 பேருக்கும்,
ரஷ்யாவில் 6,635 பேருக்கும்,
அர்ஜென்டினாவில் 3,367 பேருக்கும்,
பெருநாட்டில் 3,198 பேருக்கும்,
சவுதி அரேபியாவில் 3,159 பேருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.