சென்னையில் மட்டும் ஒரே நாளில் கொரோனாவால் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், அதனுடைய பாதிப்பும், இறப்பு விகிதமும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் பாதிப்பு எண்ணிக்கையும், இறப்பு விகிதமும் நாள்தோறும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் சுகாதாரத் துறையினரும் புது புது புது நடவடிக்கைகள் கொரோனாவுக்கு எதிராக மேற்கொண்டு வரும் பட்சத்தில், ஓரிரு நாள்கள் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து, டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
ஆனால் அதே நிலை இரண்டு நாட்கள் கூட தாக்கு பிடிக்காமல் மீண்டும் பாதிப்பு எண்ணிக்கையும் இறப்பு விகிதமும் அதிகரிக்க தொடங்கி விடுகிறது. அந்த வகையில், இன்று சென்னையில் மட்டும் ஒரே நாளில் கொரோனாவால் 24 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கான பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அவையாவன, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 9 பேரும், ஓமந்தூர் மருத்துவமனையில் 4 பேரும், ஸ்டான்லி மருத்துவமனையில் 1 நபரும், கே எம் சி அரசு மருத்துவமனையில் 4 பேரும், தனியார் மருத்துவமனையில் 6 பேரும் பலியாகியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 1220 ஆக அதிகரித்துள்ளது.