கல்லூரி மாணவர்களின் குரலுக்கும் செவிசாய்த்து தேர்வை ரத்து செய்ய ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
பல்கலைக்கழக தேர்வுகளை கொரோனா பாதிப்பின் காரணமாக ரத்து செய்து மாணவர்களின் செயல்திறனை அடிப்படையாக கொண்டு மதிப்பெண் வழங்க வேண்டும் என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.சென்ற ஆண்டு நடக்கவிருந்த பல்கலைக்கழக தேர்வுகள் கொரோனா பாதிப்பின் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டன. ஊரடங்கின் தளர்வுகள் காரணமாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலின்படி பல்கலைக்கழக மானியக் குழு தேர்வுகள் நடத்துவதற்கான பணிகளை மேற்கொள்கிறது.கொரோனா வைரஸானது மக்களுக்கு பெரும் வேதனையை அளித்துள்ளது. இதில் பள்ளி கல்லூரி மாணவர்களே மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என தனது கருத்தை ராகுல்காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும் ஐஐடி உட்பட்ட கல்லூரிகள் தேர்வினை ரத்து செய்துள்ள நிலையில் யுஜிசி நிர்வாகம் தேர்வினை ரத்து செய்ய வேண்டுமென கூறியுள்ளார்.இத்தகைய நேரத்தில் தேர்வினை நடத்துவது என்பது சாத்தியமில்லாதது எனவே மாணவர்களின் குரலுக்கு செவிசாய்த்து அவர்களின் முந்தைய செயல்திறனை அடிப்படையாக கொண்டு மதிப்பெண் வழங்கவேண்டுமென காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.