Categories
சினிமா

பிகில் பட நடிகைக்கு கிடைத்த வாய்ப்பு… பிரபல நடிகரின் தம்பிக்கு ஜோடியாவதால் ரசிகர்கள் கொண்டாட்டம்..!!

பிகில் திரைப்படத்தில் வந்த நடிகை அடுத்ததாக விஜய்தேவரகொண்டா தம்பியுடன் ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் அட்லியின் இயக்கத்தில் விஜயின் நடிப்பில் சென்ற ஆண்டு தீபாவளி அன்று திரையரங்கில் வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸில் ரூ.300 கோடி வசூலை பெற்ற படம் பிகில். இதில் நடிகர் விஜய் மார்க்கெட் தலைவராகவும், மகனாகவும், கால்பந்து அணி பயிற்சியாளராகவும் மூன்றுவிதமான வேடமிட்டு நடித்துள்ளார். மைக்கேல், பிகில், ராயப்பன் என்று 3 கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இதில் நடிகை வர்ஷா பொல்லம்மா விஜயின் கால்பந்து அணியில் ஒருவராக நடித்துள்ளார்.  இப்படம் தெலுங்கு மொழியில் விசில் என்ற பெயரில் வெளியாகியது. அதுமட்டுமின்றி choosi choodangene, jaanu ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இவரது அடுத்த படமாக அறிமுக இயக்குனர் வினோத் ஆனந்த்தோஜு இயக்கத்தில் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டாவிற்க்கு ஜோடியாக நடிக்கயுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |