தடை செய்யப்பட்ட சீன செயலியான டிக் டாக் தன்னுடைய தலைமையிடத்தை மாற்றுவது குறித்து ஆலோசித்து வருகின்றது.
சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் செயலி தான் டிக் டாக்.. இந்த டிக் டாக்கிற்கு இந்தியாவில் தான் அதிக பயனாளர்கள் இருந்தனர். இந்த சூழலில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே லடாக் எல்லையில் பிரச்னை ஏற்பட்டதை அடுத்து, டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது.. அதே போல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் டிக்டாக் செயலிக்கு தடை விதித்திருக்கிறார்..
இதற்கிடையே தனது தலைமையகத்தை சீனாவிலிருந்து வேறு ஒரு நகரத்திற்கு மாற்றுவது மற்றும் புதிய நிர்வாக குழுவை உருவாக்குவது பற்றி டிக் டாக் பரிசீலித்து வருகிறது. டிக் டாக் நிறுவனம் ஏற்கனவே லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், லண்டன், டப்ளின், சிங்கப்பூர் ஆகிய 5 நகரங்களில் அலுவலகங்களை கொண்டுள்ளது.
இந்தியா மற்றும் அமெரிக்கா இரு நாடுகளும் அடுத்தடுத்து தடை விதித்ததன் காரணமாக டிக்டாக் நிறுவனத்தின் வருமானம் தற்போது குறைந்துள்ளதால் தனது தலைமையகத்தை மாற்றும் முடிவில் ஆலோசனை செய்து வருகிறது.