சூரத் நகைக்கடையில் வைரம் பதித்த முகக்கவசங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு பார்க்கும் அனைவரையும்ஆச்சிரியத்தில் ஆழ்த்தி வருகிறது.
இன்றைய நாளில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு முகக்கவசம் அணிவது என்பது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இதனால், மக்களை கவர வகையில் பல வண்ணங்களிழும் பிரபலங்களின் படங்களும் பதித்த முகக்கவசங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர் .இந்நிலையில் சூரத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் ஒரு படி மேலே போய் வைரம் பதித்த முகக்கவசம் விற்பனைக்கு வைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.
இந்த முகக்கவசங்கள் ரூ. 1.5 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரையிலான விலையில் நகைக்கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டு வருகின்றன. இதை பற்றி வைர நகைக் கடை உரிமையாளர் தீபக் சோக்ஸி கூறுகையில், “வாடிக்கையாளர் ஒருவர் தனது வீட்டில் வைத்து நடைபெற உள்ள திருமணத்திற்கு எங்கள் கடைக்கு வந்து, மணமகன், மணமகளுக்கு தனித்தன்மை வாய்ந்த முகக்கவசங்கள் வேண்டும் என கேட்டார். இதனால் தனக்கு இந்த யோசனை வந்தது” என கூறியுள்ளார்.