Categories
லைப் ஸ்டைல்

வெந்நீர் கூட இதை சேர்த்தா போதும்… சிகரெட் பிடிக்கும் எண்ணம் காணாம போகும்..!!

காலை வேளையில் புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட முயற்சி செய்தாலே புகைப்பழக்கத்தில் இருந்து நாம் படிப்படியாக மீண்டு வரலாம். புகைப்பழக்கத்தை மறக்க நாம் செய்ய வேண்டிய சில விஷயங்களை குறித்து காண்போம்.

புகைப்பிடிப்பதால் வரும் விளைவுகளை நன்றாக அறிந்திருந்தாலும் அதனை கைவிடமுடியாமல் பலர் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு காலையில் எழுந்ததும் புகை பிடிக்க அவர்களின் மனம் தாவும். அப்பொழுது தான் அவர்களுக்கு அன்றைய நாளை உற்சாகமாக தொடங்கமுடியும் என்ற மனநிலைக்கு மாறியிருப்பார்கள். இத்தைகைய புகைப்பழக்கத்தை மறப்பதற்கு செய்ய வேண்டிய பழக்கவழக்கங்கள் குறித்து இப்போது காண்போம்.

1. மனித உடலானது  60 விழுக்காடு நீரால் நிறைந்திருக்கிறது. நம் உடலுக்கு  போதுமான அளவு திரவங்கள் கட்டாயம் கிடைக்க வேண்டும். இரவில் தூங்கி எழும்போது காலையில் திரவத்தின் அளவானது குறைவாக இருக்கும். அந்த நேரத்தில் சிகரெட்குடிக்கும் எண்ணம் வரலாம் அதை கட்டுப்படுத்த, மிதமான சுடுநீருடன் எலுமிச்சை சாறு சேர்த்து பருகலாம்.இதனை அன்றாட பழக்கமாக மாற்றுவதால் புகை பிடிக்கும் எண்ணத்தை குறைக்கலாம்.

2. காலையில் எழுந்த உடன்  நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி போன்றவற்றை  மேற்கொள்வதால் உடல் இயக்க திறன் அதிகரிக்கிறது. மேலும் உடலை இலகுவாக்குகிறது. உடற்பயிற்சியை தொடர்ச்சியாக செய்யும்போது  உடல் கட்டுக்கோப்பாக மாறி உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படுத்துவதோடு நிக்கோட்டின் வீரியத்தை குறைக்கவும் உதவுகிறது .

3. சிகரெட் பிடிக்கும் நபரை பார்க்கும்போதோ, வழக்கமாக புகைப்பிடிக்கும் நேரத்தை நெருங்கும்போதோ புகைப்பிடிக்கும் எண்ணம் மேலோங்கும். அந்த நேரத்தில் கண்களை மூடி மெதுவாக மூச்சு விடுங்கள். சிறிது நேரம் மூச்சு பயிற்சியை தொடர்ந்து செய்துகொண்டே, ‘இனி ஒருபோதும் புகைப்பிடிக்க மாட்டேன்’ என்ற எண்ணத்தை ஆள்மனதில் பதியச் செய்ய வேண்டும்.

4. ஒவ்வொரு முறையும் புகைப்பிடிக்கும் ஆசை வரும்பொழுதெல்லாம்  புகைப்பழக்கத்தை விட்டுவிட தேவையான அனைத்து காரணங் களையும் நினைவூட்டி காலையில் எழுந்ததும் பார்க்கும்  இடமெல்லாம் ‘நான் வலிமையானவன்’, ‘புகைப்பழக்கத்தை மீண்டும் தொடரமாட்டேன்’ என்ற வாசகங்களை மனதில் பதியவையுங்கள். சாப்பிடும் அறை, குளியல் அறை, குளிர்சாதனப்பெட்டி, மேலும் நாம் அதிகமாக பயன்படுத்தும் இடங்களில்  புகைப்பிடிக்க தடை செய்யும் லோகோ பொறித்த ஸ்டிக்கரை ஒட்டிவைக்கவும்.

5. காலையில் எழுந்தவுடன் செய்யும் வழக்கமான பழக்கங்களை மாற்றி அமைத்து  புகைப்பழக்கத்தை தவிர வேறு விஷயங்களை பற்றி சிந்திக்க வேண்டும். மேலும் புகைப்பிடிக்க தூண்டும் ஆசையை குறைக்க வழக்கமாக எழுந்தவுடன் காபி குடிப்பது, சிற்றுண்டி சாப்பிடுவது, சிகரெட் பிடிப்பது என பழகி இருந்தால் அதற்கு பதிலாக ஆரஞ்சு சாறு, முட்டையுடன் சிற்றுண்டி சாப்பாடு போன்றவற்றை பழக்கப்படுத்தி சாப்பிடும் இடத்தையும் மாற்றி அமைக்கலாம்.

6. நீங்கள் வாகனம் ஓட்டும்போழுது புகைப்பிடிக்கும் எண்ணம் தோன்றினால் இசையில் உங்கள் கவனத்தை செலுத்தி மனதை நிதானப்படுத்தவும்.

7. ஒவ்வொரு முறையும் சிகரெட்டை பிடிக்காமல் இருக்கும் பொழுதெல்லம் உங்களை பற்றி நீங்களே பெருமையாக பேசுங்கள். இந்த பழக்கத்தை கைவிட ஒவ்வொரு முறையும் உங்களின் இலக்கை நிர்ணயித்து கொள்ளுங்கள் . அந்த இலக்கை எட்டும்போது ஒவ்வொரு முறையும் நண்பர்களுக்கு தெரியப்படுத்தி  புகைப்பழக்கம் பற்றிய சிந்தனை வராமல் இருந்தால் நண்பர்களை அழைத்து விருந்து கொடுங்கள். அந்த நேரத்தில் புகைப்பிடிக்கும்  எண்ணம் நினைவுக்கு வராமல் போகும். இதனால் அவர்களும் புகைப்பழக்கத்தை கட்டுப்படுத்த  பக்கப்பலமாக இருப்பார்கள்.

Categories

Tech |