கொரோனாவை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனாவின் பரவல், அதன் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறது. உலக சுகாதார மையத்தின் ஆலோசனையை கேட்டு மத்திய சுகாதார அமைச்சகம் உரிய நெறிமுறைகளை மாநில அரசுக்கு வழங்கி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றது. பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் காணொளி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக 25 ஆயிரம் என்ற அளவிலும், அதனை தாண்டியும் பதிவாகி வருகிறது. இதனால் மொத்த பாதிப்பு 8 லட்சத்து 22 ஆயிரமாக உள்ளது. கொரோனா பாதிப்பில் உலகிலேயே மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியா, நல்லமுறையில் சிகிச்சை அளித்து 516,308 பேரை குணப்படுத்தி அசதியுள்ளது. கொரோனா பாதித்த 22,152 பேர் உயிரிழந்துள்ளனர். இருந்தும் கொரோனா உயிரிழப்பை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது.
நாட்டிலே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி அடுத்தடுத்து உள்ளன. இந்நிலையில் பிரதமர் மோடி, கொரோனாவை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பான நடவடிக்கை எடுத்துவரும் மாநில அரசுகளுக்கு பாராட்டுக்கள். பொது இடங்களில் கூடும் மக்கள், சுகாதார மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
கொரோனா அதிகம் பாதிப்பு உள்ள மாநிலங்களுக்கு ஒரே மாதிரியான வழிகாட்டல் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.இந்தியாவை விட குறைவான நோய் தொற்று கொண்ட ரஷ்யாவில் கூட 4 லட்சத்து 97 ஆயிரம் பேர் தான் தற்போது வரை மீண்டு உள்ளனர் என்பது இந்தியா சிறப்பாக சிகிச்சை கொடுத்து வருவதற்கான சான்றாக பார்க்கப்படுகின்றது.