Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நாளை முதல்…. அடுத்த 3 நாளுக்கு முழு ஊரடங்கு…. வருவாய் ஆட்சியர் உத்தரவு….!!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் நாளை முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என வருவாய் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது ஆறாவது கட்ட நிலையில் ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் சமயத்தில், பல தளர்வுகள் ஏற்படுத்தபட்டாலும், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை 1 நாள் மட்டும் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காகவே முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகளின், பரிந்துரையின் படி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பொருத்து அவ்வப்போது கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், நாளை தமிழகம் முழுவதும் ஒரே ஒரு நாள் மட்டும் முழு ஊரடங்கு கடைபிடிக்கபடும் பட்சத்தில், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சியில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு முழு ஊரடங்கு கடைபிடிக்க கோரி உத்தரவிடப்பட்டதுடன், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் இப்பகுதியில் அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பால் விற்பனை, மருந்து கடைகளை தவிர மற்ற அனைத்துக் கடைகளையும் மூடுமாறு வருவாய் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

 

Categories

Tech |