மேஷ ராசி அன்பர்களே …! இன்று புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாளாக இருக்கும். பூமி வாங்கக் கூடிய யோகமும் இருக்கும். ஊர்மாற்றம், இடமாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். அருகில் இருப்பவர்களால் ஆதாயம் இருக்கும். பகை கொஞ்சம் நட்பாக கூடும். ஆகையால் பேச்சில் மட்டும் நிதானம் இருந்தால் போதும். திடீரென்று கோபம் உருவாகும். ஏதாவது ஒரு வகையில் அடுத்தவரிடம் வீண் பேச்சு கேட்க நேரலாம்.
கவனமாக இருங்கள் மற்றவர்கள் செயல்களால் மனவருத்தம் கொஞ்சம் உண்டாகலாம். நீண்டநாள் இழுபறியாக இருந்துவந்த பிரச்சினைகள் ஓரளவுக்கு முடிவுக்கு வரும். தொழில் வியாபாரத்தில் இருந்துவந்த பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்து ஆர்டர்கள் வந்து சேரும். வியாபாரப் போட்டிகள் தடை தாமதங்கள் நீங்கும். இன்று அனைவரின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும். ஆனால் பேச்சில் மட்டும் கொஞ்சம் நிதானம் வேண்டும்.
உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாகவே இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்துமே ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.