துலாம் ராசி அன்பர்களே…! இன்று பொறுமையோடு செயல்பட்டு வருமானம் காணவேண்டிய நாளாக இருக்கும். சான்றோர்களின் சந்திப்பு நம்பிக்கையை கொடுக்கும. திட்டமிட்ட பயணம் ஒன்றில் திடீர் மாற்றங்களை செய்விர்கள். அதிகாரிகளின் அனுகூலமும் உண்டாகும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு மன அழுத்தத்தைத் தருவதாக இருக்கும். கவனமாக எதையும் கையாளுவது ரொம்ப நல்லது.
பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்வது நன்மையைக் கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே திடீர் மன வருத்தம் அடையும் படியான சூழ்நிலை வரலாம் கவனமாக இருங்கள். உங்களது பொருட்களை நீங்கள் கவனமாக பாதுகாத்துக் கொள்வது ரொம்ப நல்லது. பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கி விடுவதும் நன்மையை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் என்பது கண்டிப்பாக வேண்டும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு எப்பொழுதும் போலவே அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்.