விருச்சிக ராசி அன்பர்களே…! உங்களுடைய வாழ்க்கைத் தரம் உயரும் நாளாக இருக்கும். வருமானம் எதிர்பார்த்ததை விட கூடுதலாகவே கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். விரதம் வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள். இன்று இழுபறியான நிலை மாறி மனம் மகிழும் படியான சம்பவங்கள் நடந்தும் முடியும். தொழில் மந்தமாக இருந்தாலும் கவலை கொள்ளாதீர்கள் சிறப்பாகவே இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் விலகிச்செல்லும். கொடுக்கல் வாங்கலில் கொஞ்சம் கவனமாக இருங்கள்.
பண வரவு சிறப்பாக இருக்கும். பணிகள் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். மேலிடத்தில் இருப்பவரிடம் இருந்து வந்த மனம் நோகும்படியான வார்த்தைகள் கொஞ்சம் வெளிப்படலாம். அதை மட்டும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள். தேவையில்லாத பிரச்சனைகளை மட்டும் தலையிடவேண்டாம். அனைவரையும் அனுசரித்துச் சென்றால் இன்று என்னால் மிகவும் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். காதலர்களுக்கு இன்று பேச்சில் கண்டிப்பாக நிதானம் வேண்டும்.
குடும்பத்தில் ஓரளவு கலகலப்பான சூழல் இருக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 6
அதிஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.