Categories
அரியலூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை முதல் அடுத்த 7 நாட்களுக்கு – அரியலூரில் தீடீர் அறிவிப்பு …!!

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் காரணமாக 497 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 459 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 38 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூர் நகரில் பூக்கடை நடத்தி வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டத.

இதனையடுத்து அரியலூர் நகரிலிருந்து கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழ்நிலை காணப்படுவதால், தற்போது கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாபாரிகள் மற்றும் நகராட்சி பணியாளர்கள், நகராட்சி அலுவலர்கள்ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நாளை முதல் அடுத்த 7 நாட்களுக்கு அறியலூர் நகரில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்படும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காய்கறி, பால் மற்றும் மருந்தகம் தவிர அனைத்து கடைகளும் மூடப்படும் என்று சொல்லி உள்ளார்கள். இதனால் அரியலூர் நகர் முழுவதும் அடுத்த 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு என வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |