Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் என்றாலே கெத்து தான்…. 15 லட்சத்தை தொட்டு அசத்தல்… வியக்கும் மாநிலங்கள் …!!

தமிழகத்தில்கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1,900த்தை நெருங்குவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 3,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,34,226 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் இன்று மட்டும் 1,185 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு மட்டும் மொத்த பாதிப்பு 76,158ஆக உள்ளது. இன்று மட்டும் 3,591 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 1,34,226 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 69பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு 1,898ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 46,410ஆக உள்ளது. இன்று மட்டும் தமிழகத்தில் கொரோனா பரிசோதனை 36,628 பேருக்கு மேற்கொள்ளப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 15,00,909 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. இது எனைய மாநிலங்களை வியக்க வைத்துள்ளது.

Categories

Tech |