சிஎஸ்கே அணிக்காக தோனி தலைமையில் ஆடிய தமிழக வீரர் எஸ்.பத்ரிநாத் தோனி எப்படிப்பட்ட கேப்டன் என்பதைப் பற்றி மனம் திறந்து கூறியுள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றில் பத்ரிநாத் கூறுகையில் “தோனி எப்போதுமே அணியில் வீரர்களின் மீது அதிக கவனம் செலுத்துவார். என்னுடைய ரோல் என்பது பெரும்பாலும் கடினமான சூழலிலிருந்து அணியை எப்படியாவது மீட்க வேண்டும். என் பணியானது மிடில் ஆர்டர் பணியாகும். தோனியின் பலம் என்னவெனில் வீரர்களுக்கு கூடுதல் வாய்ப்புக்கொடுப்பர். பத்ரி நன்றாக ஆடுகிறார் என்று தோனி நினைத்தால் அங்கு பத்ரி இருப்பார், ‘நான் வாய்ப்புகள் வழங்குவேன், அவர் நிரூபிக்கட்டும்’என்பார் தோனி.
ஒரு வீரர் சரியில்லை என்றால் கடவுளே வந்தாலும் அவரை காப்பாற்ற முடியாது. அவர் ஒரு முடிவெடுத்து, என்ன ஆனாலும் சரி என்று அதில் உறுதியாக நிற்பார். நாங்கள் எப்படி விளையாடினாலும் ஓய்வறைச் சூழல் எங்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும், உரிமையாளர்களும் எங்களை ஒன்றுபோல் நடத்துவார்கள். இதனால் அணியில் சகோதரத்துவம் நிலவும். தோனி முதல் அங்குள்ள அனைவருமே ஒன்றுபோல் நடத்தப்படுவார்கள்” என கூறியுள்ளார் .