Categories
தேசிய செய்திகள்

முதலமைச்சர் நாற்காலியை ஆட்டும் பெண் – சூடு பிடிக்கிறது விவகாரம்

சாதாரணமாக பெண்களையும், தங்கத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. ஆனால் தங்க கடத்தலிலும் பெண்ணையும், தங்கத்தையும் பிரித்து பார்க்க இயலாமல் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒரு வழக்கு இந்தியாவை மட்டுமல்ல மற்ற நாடுகளையும் தன் பக்கம் கவர்ந்து இழுத்திருக்கின்றது.

முதலமைச்சர் நாற்காலியை ஆட்டும் பெண் ? சூடுபிடிக்கிறது விவகாரம் :

தேர்தல் ஆண்டில் கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு  தங்கம் கடத்திய குற்றச்சாட்டில் சிக்கிய ஸ்வப்னாவால் தலைவலி ஏற்பட்டுள்ளது. முதல்வர் அலுவலகத்தில் உள்ள அதிகாரி ஸ்வப்னாவிற்கு நெருக்கம் என்பதால் முதல்வர்  ராஜினாமா செய்ய வேண்டும் என்று பலர் களத்தில் இறங்கி விட்டார்கள். தங்க கடத்தலில் அவருக்கும் பங்கு இருக்கிறது என்று சொல்லி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

நடந்தது என்ன ?

கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு ஒரு சிறப்பு தனி விமானம் வருகிறது. அந்த விமானத்தில் ஒரு பார்சல் வருகிறது. அந்த பார்சலை பொருத்தவரை என்ன இருக்கிறது ?  என அதிகாரிகளுக்கு தெரியாது. ஆனால் ஒரு துப்பு வருகிறது. இந்த பார்சலை பொருத்தவரை தங்கம் இருக்கிறது. அதை திறந்து பாருங்கள் என்று ரகசிய தகவல் வருகின்றது. தகவல் வந்ததும் பார்சலை திறந்து பார்க்க கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு ஒரு சிக்கல் இருக்கிறது.

அவர்களால் அந்த பார்சலை பிரிக்க முடியாது. சாதாரண பார்சல் என்று வந்தால் கஸ்டம்ஸ் அதிகாரிகள் எளிதாக பிரித்து பார்த்து விடுவார்கள். ஆனால் அதில் தூதரகம் பார்சல் என எழுதியிருந்தார். இந்தியாவின் வெளிவிவகாரத் துறை அமைச்சகத்திடம் சிறப்பு அனுமதி பெற்று வர வேண்டும். இந்த பார்சலில் ஐக்கிய அமெரிக்க தூதரகம் பார்சல் என்று எழுதி இருந்ததால் கஸ்டம்ஸ் அதிகாரிகள் என்ன செய்யலாம் என்று யோசிக்கிறார்கள் ? சிறப்பு அதிகாரம் தேவைப்படுகிறது. வந்த துப்பும் அவங்களுக்கு உறுதியாக தெரிகிறது.

ஒவ்வொரு முறையும் இந்த மாதிரி பார்சல் வரும்போது தூதரகம் வாகனம் வருவது கிடையாது. வேறு ஒரு வாகனம் வருகிறது, தூதரக பார்சலை எடுத்து செல்கிறது. இதனால் கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு சந்தேகம் வழுக்கின்றது, ஒரே குழப்பமாக இருக்கிறது .இதையடுத்து  இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் சிறப்பு அனுமதி பெற்று, அந்த பார்சல் பிரிக்கப்படுகிறது.

காத்திருந்தது அதிர்ச்சி:

அதிகாரிகளுக்கு வந்த துப்பை தொடர்ந்து பார்சலை திறந்த போது அதிகாரிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதில் 30 கிலோ தங்கம்  இருப்பது தெரிய வருகின்றது. அப்போது கஸ்டம்ஸ் அதிகாரியை தொடர்பு கொண்ட ஒரு பெண்… எங்க தூதரக பார்சல் இன்னும் வரவில்லையே…. என்ன ஆச்சு ? அப்படின்னு கேள்வி கேட்கிறார்கள். இதையடுத்து அந்த பெண்ணுக்கும், பார்சலுக்கும் தொடர்பு இருக்கின்றது என கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்து விட்டது அந்த பெண் தான் ஸ்வப்னா சுரேஷ்

இவரால் கேரள முதலமைச்சரின் நாற்காலி ஆட்டம் கண்டு விட்டது:

இப்போது ஸ்வப்னா தூதரக அதிகாரி என்னை போன் போட சொன்னதால் நான் போன் போட்டேன். பார்சல் என்னுடையது அல்ல… தூதரக அதிகாரி உடையது… ஆகையால் இந்த வழக்குக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை  என்று கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டார்கள். கேரள உயர்நீதிமன்றம்…  இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிப்பதால் அது சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில்  முன்ஜாமீன்  போடுங்கள் என்று சொல்லி செவ்வாய்க்கிழமைக்கு இந்த வழக்கை கேரள நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இதுவரை ஸ்வப்னா தலைமறைவாக இருந்த நிலையில் சற்று முன்தான் ஸ்வப்னா பெங்களுருவில் கைது செய்யப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் முதல்வர் அலுவலக IAS அதிகாரி சம்பந்தப் பட்டிருப்பதால் கேரள முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக போராட்டம் வலுக்கின்றது.

Categories

Tech |