Categories
தேசிய செய்திகள்

“சரத்பவார் பிரதமர் கனவில் இருந்தார்” மோடி விமர்சனம்……!!

ஒரு காலத்தில் சரத் பவார் பிரதமர் ஆக வேண்டுமென்ற கனவில் இருந்ததாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

நாடளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகின்றது. மத்தியில் ஆட்சியை பிடிக்க வேண்டுமென்று பிஜேபி , காங்கிரஸ் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் பிஜேபியுடன்  கூட்டணி அமைத்து தேர்தலை சந்திகின்றது. இதையடுத்து வேட்பாளர்களை ஆதரித்து வார்தாவில் நேற்று  தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

கையில் இருந்து கட்சி நழுவிவிட்டது: நிலைமை சாதகமாக இல்லாததால் சரத் பவார் போட்டியிடவில்லை - பிரதமர் மோடி பேச்சு

அப்போது தொண்டர்களிடம் பேசிய மோடி , காங்கிரஸ் கட்சியினர் என்னை ‘கழிப்பறை காவலாளி‘ என்று சொல்கின்றது. நீங்கள் என்னை இழிவுபடுத்த வேண்டுமென்று கூறிய இந்த வார்த்தைகளை  நான் பாராட்டாகவே எடுத்துக் கொள்கிறேன். ஏனெனில் இந்த நாட்டின் பெண்கள்  மற்றும்  குழந்தைகளை காப்பவனாக நான் இருக்கிறேன் என்ற அர்த்தம் நீங்கள் கூறியதில்  இருக்கிறது.  அமைதியை விரும்பும் இந்து மதத்தினரை பார்த்து பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தியவர்கள் காங்கிரஸ்காரர்கள் எனவே தான், பெரும்பான்மையான சமுதாயத்தினர் அதிகமாக வசிக்கும் தொகுதிகளில் கூட காங்கிரஸ் போட்டியிட தயங்குகிறது.

சரத்பவார் க்கான பட முடிவு
சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி இது மிகவும் சிக்கலான தருணம். அங்கே கோஷ்டி பூசல் தலைவிரித்தாடுகிறது.தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை கூட சரியாக தேர்வு செய்ய  முடியவில்லை. சரத் பவாரின் பிடியில் இருந்த தேசிய வாத காங்கிரஸ் கட்சி நழுவி விட்டது. எனவே நிலைமை சாதகமாக இல்லாததால், இந்த தேர்தலில் சரத் பவார் போட்டியிடவில்லை.
ஒரு காலத்தில், சரத்பவார் பிரதமராக வேண்டுமென்ற கனவில் இருந்தார். பின்னர், மாநிலங்களவை உறுப்பினராக இருந்தால் போதும் என்று இருந்த சரத்பவார் இப்போது தேர்தலில் போட்டியிடவே வேண்டாம் என்று முடிவு செய்து விட்டார் என்று மோடி தெரிவித்தார்.

Categories

Tech |