பலாத்கார வழக்கில் இருக்கும் குற்றவாளி உள்துறை அமைச்சராக பதவி ஏற்றத்தை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
பலாத்கார குற்றம்புரிந்து அதற்கான விசாரணையில் இருக்கும் டர்மனை உள்துறை அமைச்சராக பதவியில் நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் மத்திய பாரிஸில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம் செய்தனர். திங்கள் கிழமை அரசாங்க மறுசீரமைப்பில் டர்மனுக்கு உள்துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. இதற்கு முன்னதாக பட்ஜெட் அமைச்சராக டர்மன் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் டர்மன் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டுமென பெண்கள் போராட்டத்தைத் தொடங்கினார். கடந்த திங்களன்று டர்மன் பதவியேற்க செவ்வாயன்று உள்துறை அமைச்சகம் முன்பு பெண்களின் போராட்டம் நடைபெற்றது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு டர்மன் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. சென்ற மாதம் டர்மன் மீதான குற்றச்சாட்டு விசாரணையை மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டதாக நீதித்துறை வட்டாரம் தெரிவித்தது. அவருக்கு எதிரான விசாரணை அவரது பதவி நியமனத்தை தடுப்பதற்கான காரணமாக இருக்காது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. முதற்கட்ட விசாரணைக்கு பிறகு தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கு சரியான விசாரணையை தொடர மற்றொரு வழக்கு உள்ளதா என்பதை விசாரணையை நீதிபதி தான் தீர்மானிக்க முடியும் என்றும் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.