கனவில் கண்ட எண்களைக் கொண்ட லாட்டரி சீட்டு வாங்கிய பெண்ணுக்கு பெரும் பரிசுத்தொகை விழுந்துள்ளது
ஆஸ்திரேலியாவில் இருக்கும் குன்ஸ்லாந்து பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் 15 வருடங்களுக்கு முன்பு தனது கனவில் லாட்டரி சீட்டு ஒன்றில் இருந்த எண்களை பார்த்துள்ளார். பின்னர் அந்த எண்களை குறித்து வைத்துக்கொண்டு பலமுறை அதே எண்களைக் கொண்ட லாட்டரி சீட்டுகளை வாங்கியுள்ளார். 15 வருடங்கள் கழித்து கடந்த வாரம் அதே எண்கள் கொண்ட லாட்டரி சீட்டை அந்தப்பெண் வாங்கியபோது அதற்கு பரிசாக 7 லட்சம் அமெரிக்க டாலர் அவருக்கு கிடைத்துள்ளது. இதன் இந்திய மதிப்பு 5 கோடிக்கும் அதிகம்.
இதுகுறித்து அந்த பெண் கூறுகையில், 15 வருடங்களுக்கு முன்பு எனது கனவில் இந்த லாட்டரி சீட்டு எண்களை பார்த்த பிறகு அதே எண்களைக் கொண்ட லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்தேன். ஆனால் ஒரு முறை கூட இந்த எண்கள் என்னை ஏமாற்றியதில்லை. குறைந்த அளவு பரிசுத்தொகையாவது நிச்சயமாக கிடைத்து விடும். ஆனால் இந்த முறை பெரிய தொகையாக 7 லட்சம் டாலர் எனக்கு கிடைத்துள்ளது. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.